Tag: மற்றுமொரு
சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-ஒருவர் பலி..!
தம்புள்ளை – பல்வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த மகிழுந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியை கடக்க முற்பட்டபோது இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் மாத்தளை நாவுல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மகிழுந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றுமொரு மாணவனின் சடலமும் சற்று முன் மீட்பு..!{படங்கள்}
அம்பாறையில் நேற்றையதினம் கடலில் மூழ்கி மாயமான பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மாளிகைக்காடு – சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர். அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன. மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய […]
தமிழர் பகுதியில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-பயணிகளின் கதி..!{படங்கள்}
மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி பற்றி தெரிந்தவர்கள் உடன் மட்டு வைத்தியசாலை செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விபயங்கள் இணைக்கப்படும்.
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}
ஆலங்குடாவை சேர்ந்த முச்சக்கர வண்டி கல்பிட்டி வீதி தலுவ சின்ன பாலத்துக்கு அருகில் கட்டுபாட்டையிலந்த வீதி விட்டு விலகி தலைகீழாக தடம்புரண்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்டுள்ளனர்.
மலையகத்தில் மற்றுமொரு சோகம்-ஒருவர் பலி..!
நுவரெலியா மவுண்ட் மேரி வீதியில் மண்மேட்டில் இருந்து வயோதிபரொருவர் நேற்று வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 சென்றிமீட்டர் உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் சடலம் பிரேதப் […]
மற்றுமொரு கோர விபத்து-இளைஞன் பலி..!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த இளைஞன் தனது வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செங்குத்தான வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து […]
யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}
இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் சற்று முன் மற்றுமொரு கோர விபத்து..!{படங்கள்}
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.
முல்லைத்தீவில் மற்றுமொரு சோகம்-இன்றும் ஒருவர் பலி..!
முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தரான ஆறுமுகத்தான் குளத்தினை 48 அகவையுடைய சேர்ந்த துரைராசா ஆனந்தராசா என்பவரே துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வேட்டைக்கு சென்ற குறித்த நபர் காட்டிற்குள் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் எடுத்துவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். […]
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-ஊழியர்களின் நிலை..!{படங்கள்}
மட்டக்களப்பிலிருந்து டயலோக் நிறுவன ஊழியர்கள் பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. டயலொக் நிறுவனத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கையில் குறித்த கார் பாதையை விட்டு விலகியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் […]