Tag: யாழ்
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 31 மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் மீனவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை […]
வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு
அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் தென்னை பயிரில் காணப்படும் ஓலைகளில் வெள்ளை ஈயின் தாக்கம் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது இதனை கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய் சலவைத்தூள் உள்ளிட்டவற்றை பயிர்களுக்கு […]
திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆ்சிரமத்தால் குடிநீர் சுத்திகரிப்பு….!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசம் திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 290000/- பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதி வழங்கப்பட்டு இன்று காலை 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் செந்தில் ராஜ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நன்னீர் சுத்திகரிப்பு பொறியினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திறந்துவைத்தார் இந்நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர் கலாநிதி செந்தில் […]
கனகசிங்கம் பத்மாவதி நினைவாக வற்றாப்பளையில் சந்நிதியான் ஆ்சிரமத்தால் வீடு கையளிப்பு…!
காரை நகரை சேர்ந்த கனகசிங்கம் பத்மாவதி நினைவாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டு அது இன்று கையளிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு அங்கு பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு வீட்டை சம்பிரதாய பூர்வமாக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திறந்து வைத்து வீட்டு உரிமையாளரிடம் திறப்பை கையளித்தார். குறித்த பயனாளியின் ஐந்து பேர் கொண்ட குடும்பம் சிறிய பாதுகாப்பற்ற ஓலை குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்த நிலையிலேயே வற்றாப்பளை கிராம […]
திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் நிலையம் வலி வடக்கில் திறந்து வைப்பு!
வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்யும் நோக்கில் கழிவுகளைச் சேகரிக்கும் நிலையம் இன்று(20) திறந்து வைக்கப்பட்டது மல்லாகம் பொதுச்சந்தை வளாகத்தில்”பெறுமதி” எனும் பெயருடன் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தை யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களுடன் தெல்லிப்பளை சுகாதாரவைத்திய அதிகாரி திரு.பரா நந்தகுமார் மற்றும் save a life நிறைவேற்று பணிப்பாளர் திரு .க ராகுலன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தார்கள். இவற்றுடன் பசுமை இயற்கை பசளை அறிமுக நிகழ்வும், […]
யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் இன்று நடைபெற்றது. “இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் நடாத்தும் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு (IHC) – 2023 நாளை வியாழக்கிழமை (21) காலை 9 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி […]
வட்டு இளைஞன் படுகொலை ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காண்பித்த மனைவி
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் 06 பேரை கைது செய்துள்ளனர். […]
தொடரும் அடிப்படை உரிமை மீறல்கள்!! மனிதவுரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு பதிவு
வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸ் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டு உரிமை, உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் அன்றைய தினம் சிவராத்திரி வழிபாடுகளிற்குச் சென்றிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் இலங்கை மனிதவுரிமை ஆணைகுழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (20) முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது. சிவராத்திரி தினத்தன்று பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் வழிபாடுகளிற்காகச் சென்றிருந்த நிலையில் நீண்ட நேரம் வழிபாடாற்றுவதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு, செல்லும் பாதைகளெங்கும் […]
கஞ்சா கலந்த பீடியுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுளைந்தவர் மாட்டினார்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவாலாளிகள் பரிசோதித்தபோது கஞ்சா கலந்த பீடி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவரிற்கு நேர்ந்த கதி – படங்கள்
இன்றையதினம் சேந்தாங்குளம் கடலில் குளிப்பதற்கு வந்த மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டது. தங்கன்குளம் செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (வயது 37), மற்றும் சிவனேசன் திபிசன் என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணி […]