Tag: வவுனியா
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐஸ்கிறீம் வியாபாரியை கலைத்த பொலிசாரால் வெடுக்கு நாறி ஆதிசிவன் கோவிலில் பரபரப்பு..?{படங்கள்}
வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிசார் கலைத்தமையால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெடுக்குநாறிமலையில் இன்றையதினம் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளச்சென்ற பொதுமக்களுக்கு பொலிசாரால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு குடிதண்ணீரை கொண்டு சென்ற நீர்தாங்கி பொலிசாரால் இடைவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் 5கிலோமீற்றர்கள் நடந்துசென்ற பொதுமக்கள் நீர் இன்றி அசௌகரியத்தை எதிர்கொண்டனர். இதேவேளை ஆலய வளாகத்தில் ஐஸ் கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை பொலிசார் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து ஆலயவளாகத்தை விட்டு […]
மகா சிவராத்திரி-தடைகளை உடைத்து வெடுக்குநாறி ஆதிசிவனை தரிசித்த மக்கள்..!
வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டநிலையில் 5கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்ப்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்றயதினம் இரவு நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அரசகாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்ப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேடஅதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு செல்லும் […]
வெடுக்கு நாறி மலை பூசகர் கைது-அதிகாரத்தால் அடக்குமுறையை கையாளும் பொலிசார்..?
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மதிமுகராசா கைது செய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் சிவராத்திரி விழா ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்ற பூசகரையும் நாளைய தேவைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்ட தோரணங்கள், வாழை மரங்கள், தண்ணீர் பெளசர் போன்றவற்றை பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே பூசகர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்..
வவுனியாவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்..!
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று(05) மீட்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட கற்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டதுடன் சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் சில தினங்களிற்கு முன்னராகவே குறித்த முதியவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து […]
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியின் சாரதியை கைது செய்ய முயற்சி..!
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.சாந்தனின் புகழுடல்...
ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்கள் கோரும் யாழ்பாண மாவட்ட செயலகம்!
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஆவணக்காட்சிப் பெட்டகத்திற்கான பாரம்பரியப் பொருட்களை வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் கோரிக்கை முன்வைத்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அழிவடைந்து செல்லும் மரபுரிமைசார் பாரம்பரியங்களைப் பாதுகாத்து. அழிவும் திரிபுமின்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் வரலாற்றுக்கடமையை மேற்கொள்ளும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆவணக்காட்சிப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பழமையும் பெருமையும் மிக்க எம் பண்பாட்டு அம்சங்களை […]
தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி-அசத்திய வவுனியா பெண் சிறுத்தைகள்..!
2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன் குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியானது இம்மாதம் 23,24,25 ஆகிய தினங்களில் நடைபெற்ற தேசியமட்ட பளு தூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப்பதக்கமும், ஒரு சில்வர் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர் . பா.கிசாளினி 49 […]
தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி-அசத்திய வவுனியா பெண் சிறுத்தைகள்..!
2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன் குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
காலி போத்திவெல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர் ,கனிஷ்ட மற்றும் சிரேஸ்ர பிரிவினர்களுக்கு...
வவுனியா பேரூந்து நிலையத்தில் மோட்டாரை நிறுத்து விட்டு வந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை. அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் […]