Tag: வவுனியா
வவுனியா பேரூந்து நிலையத்தில் மோட்டாரை நிறுத்தி விட்டு வந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
வவுனியா பேரூந்து நிலையத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு...
வவுனியாவில் முதியவரை தாக்கி கைபேசியை பறித்து மதுபானம் அருந்திய கொசப்புகள் ..!
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (24) தெரிவித்தனர். வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டனர். அவர்களிடம் […]
வவுனியாவில் பீடி வாங்க வந்த இருவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் குறித்த வியாபார நிலைய உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் சிறிய வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். குறித்த வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் பீடி தருமாறு கூறியதுடன், குறித்த பெண் பீடியை எடுத்துக் கொண்டு நின்ற போது அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் […]
மாங்குளத்தில் வீதியில் இடம் பெற்ற கொடூர கொலை..!
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இ;வாறு உயிரிழந்துள்ளார் இவரது உடம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (23) அதிகாலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடையவர், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர். அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். முதலில் கத்தாரின் தோஹாவுக்கும், அங்கிருந்து […]
ரகசிய தகவலில் வவுனியாவிலும் ஒருவர் கைது..!
வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்தனர். குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை போலீஸ் அதிகாரியின் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையிலான பொலிஸ் சார்ஐன்களான கீர்த்தி ரத்தின (48001) , சொய்சா (67436) , டிசாநாயக்க (34831) , பொலிஸ் கொஸ்தாபர்களான குமார […]
வவுனியாவில் தொடர் கொள்ளயைில் ஈடுபட்ட இருவரை மடக்கி பிடித்த பொலிசார்..!
வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் […]
வவுனியாவில் நடைபயிற்சி முடிந்து திரும்பிய பெண்ணுக்குாகாத்திருந்த அதிர்ச்சி..! {படங்கள்}
வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் ஒருவர் இன்று (16.02) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் வழமை போன்று நேற்று வியாழக் கிழமை (15.02) மாலையும் நகரசபைக்கு வருகை தந்துள்ளார். இதன் போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட […]
குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்-3பிள்ளையின் இளம் தந்தை விபரீத முடிவு..!{படங்கள்}
கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று(16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், […]
வவுனியாவில் 22 வயது இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்..!
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு வகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர். இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் (13.02) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் […]