Tag: வெளியான
இலங்கையில் அழகுசாதன மொருட்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..?
மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் கொண்ட அழகுசாதனப் பொருட்கள் மாசு தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்குகோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் நேற்று (21) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், மேற்படி அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 04 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தந்த கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 1143 வகையான அழகுசாதனப் பொருட்கள் விசாரணை அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, […]
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!
ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் உயர்ந்த வரி-சற்று முன் வெளியான தகவல்..!
உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் […]
நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!
மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலைகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்..!
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி, விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த (உயர்தரம் உட்பட) மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு […]
வெட்டுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்த பெண்-விசாரணையில் வெளியான தகவல்..!
வெலிமடை டயரபா தோட்டம், மேல் பிரிவு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டயரபா தோட்டம், மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் கணவன் மனைவியை காலால் உதைத்து பின்னர் கத்தியால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது […]
நாட்டு மக்களுக்கு சற்று முன் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்க உள்ளதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதுமானதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில் நிர்மானத்துறையினை அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் செயற்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சிறிய மற்றும் நடுத்தர துறைகளை மேம்படுத்துவதற்கும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். […]
இலங்கையில் மீண்டும் மின் வெட்டா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் மின் விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடும் உஷ்ணம் காரணமாக மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் […]
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!
குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற மாணவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு […]
மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}
மன்னார் – தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல் போன சிறுமியை […]