Tag: அதிகரித்தது!
பாடசாலை நாளில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு – யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் அசமந்தம்!
அராலியில் இளைஞர் கழகம் ஒன்று முறைகேடான விதத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்திருந்தது. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு கூட்டம் நடாத்தாமல் சிலர் தமது பெயர்களை எழுதி, சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் செல்வாக்குடன் இளைஞர் கழகத்தினை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் ஏற்கனவே இளைஞர் கழகத்தினை நடாத்திய இளைஞர்கள், நிர்வாக தெரிவு […]
முன்னாள் புலி உறுப்பினர் – விசாரணை முன்னெடுக்கும் புலனாய்வுத்துறை.
இலங்கையின் வடக்கில் முன்னாள் போராளிகளை புலனாய்வு துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின் கடற்கரும்புலியாக செயல்பட்டு புலம்பெயர் நாடு ஒன்றில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தஞ்சமடைந்துள்ள மன்னாரைச் சேர்ந்த உயிர் மாறன் என அழைக்கப்படும் சகாயநாதன் சந்தியாப்பு என்பவர் தொடர்பாக புலனாய்வு துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு முதல் கடற்கரும்புலியாக செயல்பட்டு வந்த உயிர் மாறன் என அழைக்கப்படும் சகாயநாதன் சந்தியாப்பு 2008 […]
யாழில் வயோதிபர் எடுத்த அதிரடி முடிவு – இருபாலையில் சம்பவம்!
தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்! இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் இன்றையதினம் தூக்கில் தொங்கியுள்ளார். இதன்போது அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சேர்ப்பிக்கப்பட்ட குறித்த நபர் சில மணி நேரங்களில் சிகிச்சை […]
அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டையில் சம்பவம்…!{படங்கள்}
இன்று மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்நிலையில் இன்றையதினம் அவரது வீட்டில் […]
வட்டுக்கோட்டையில் பவித்திரன் படுகொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!
தவச்செல்வம் பவித்திரனின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்மாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , […]
கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் – வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் ஆகும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு இன்று(17ம் திகதி) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் என்றும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வைக்க […]
காணாமல் போன கடற்தொழிலாளர் – தேடுதல் தீவிரம்!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று 16/03/2024. அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பாமல் காணாமல் போயுள்ளார் அவர் சென்ற தெப்பம் மட்டும் கரையொதுங்கி உள்ளது. மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே காணாமல் போயுள்ளார். காணமல் போனவரை தேடும்பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்
வட்டுக்கோட்டை குடும்பஸ்தர் கொலை விவகாரம் – கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு!
வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் அவர்களது கொலைக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி அவரது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவேளே பொன்னாலை கடற்படை முகாமுக்கு அண்மையில் நின்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் அவரை துரத்தினர். இதன்போது குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் கடற்படை முகாமுக்குள் புகுந்தனர். இவ்வாறு அடைக்கலம் புகுந்தவர்களை […]
அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்தம் – உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கும் பயணிகள்!
அண்மைக் காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிர்களும் பறிபோயுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டன. இதன்போது பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எத்தனையோ விபத்துக்கள இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் […]
மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் இன்று பதவியேற்றார். இன்று காலை பாடசாலை அதிபர் கே.குகதாசன் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய அதிபர் க.சுவர்ணேஸ்வரன் அவர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் சகிதம் மலர்மாலை அணிவித்து வெகு விமர்சையாக வரவேற்கப்பட்டார். இதன் போது பாடசாலையின் சரஸ்வதி சிலையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, மும்மத மதகுருமாரின் ஆசியுடன் சுப வேளையில் தமது கடமைகளைப் […]