Tag: அதிகரித்தது!
வெடுக்குநாறிமலையில் காவல்துறையின் அடாவடி – வெடிக்கப்போகும் பாரிய போராட்டம்.
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்றை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ,மகா சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினரின் அட்டுழியங்கள் என்பவற்றின் தொடர் விளைவாக ஆலய பூசகர், தர்மகர்த்தாக்கள் உட்பட எண்மர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதும் அதே நேரம் அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக காவல்துறை, தொல்லியல், வனவள் திணைக்களங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு […]
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனமுமற்றது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தற்போது பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை எதிர்வரும் அமர்வின் போது கொண்டு வருவதாக இருக்கும் தீர்மானம் எந்தவித பயனும் அற்றது என்றும் ஏற்கனவே சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்த கெஹலியவிற்கும் இவ்வாறான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு தற்போது அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். எனவே இது போன்ற பிரேரணைகள் நம்பிக்கை அற்றவை பயனற்றவை என சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் – சபா குகதாஸ் வேண்டுகோள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் அத்துடன் சிவில் அமைப்பின் பிரநிதிகளும் இணைந்து கருத்துக்களை முன்வைப்பது மேலும் ஆரோக்கியமானதாக அமையும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை ஐ.எம்.எவ் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும். அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரையோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என […]
உணவகம் ஒன்று மீது இனந்தெரியாதோர் தாக்குதல் –
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாழில் சிவலிங்கத்தை சுற்றி இருக்கும் வெள்ளை நாகம் – வெளியான காணொளி
யாழ்ப்பாணம் – வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள தகரங்களால் வேயப்பட்ட சிறு கோவிலிலேயே குறித்த காணொளி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறு அம்மன் கோவிலில் பிள்ளையார் , சிவலிங்க உருவச் சிலைகளும் இலட்சுமியின் உருவப்படமும் வைத்து காணப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் பாம்புகள் அடிக்கடி குறித்த ஆலயத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் இராணுவத்தினர் அவ்வாறு ஒரு முறை வந்தபோதே குறித்த காணொளியை எடுத்ததாகவும், குறித்த கோவில் அமைந்துள்ள காணி உரிமையாளர் கோவிலை கவனமாக பராமரிக்குமாறும் கோரி காணொளியை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
யாழில் வெடித்த இடியன் துப்பாக்கி – இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு.
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர். ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜே -241 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார். காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் பழைய வீடுகளின் கதவு, நிலை, உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொண்டு தருமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள் கேட்டுக் […]
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!
நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். […]
ஜனாதிபதி தனது மானத்தை காப்பாற்ற கேட்டதற்காக சுமந்திரன் கூட்டத்திற்கு சென்றிருக்கலாம் – நா.உ. கோவிந்தன் கருணாகரன்
ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்தரனிடம் நீ யாவது வந்து எனது மானத்தை காப்பாற்று என கேட்டிருக்கலாம் ? அதனால் அவர் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு […]