Tag: அதிரடி
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், […]
யாழில் வயோதிபர் எடுத்த அதிரடி முடிவு – இருபாலையில் சம்பவம்!
தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்! இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் இன்றையதினம் தூக்கில் தொங்கியுள்ளார். இதன்போது அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சேர்ப்பிக்கப்பட்ட குறித்த நபர் சில மணி நேரங்களில் சிகிச்சை […]
கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!
நாட்டில் தொடர்ந்தும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளிப்புற செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிபர்களிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த […]
மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை -வரி செலுத்தாத வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் அகற்றல்.
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் நகர சபை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது மன்னார் நகர சபையிடம் உரிய வரி செலுத்தி அனுமதி பெறாது உள்ளூர் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களில் நீண்ட நாட்களாக காட்சி படுத்தப்பட்டிருந்த மொபிடெல் நிறுவனம் உள்ளடங்களாக பல்வேறு நிறுவனங்களின் விளம்பர காட்சி பலகைகள் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக இவ்வாறு காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற்று வரியை செலுத்தி காட்சிப் படுத்துமாறு நகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, கடிதங்கள் அனுப்பப்பட்டு உரிய அனுமதி யை பெறாத வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகள் மேற்கண்டவாறு அகற்றப்பட்டுள்ளது. மேலும் நகர சபை எல்லைக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறு வியாபார வர்த்தக நிலையங்கள்,சிற்றுண்டி நிலையங்கள் குளிர்பான நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் நகரசபை […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு வழங்கப்பட்ட அதிரடி தண்டனை.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட (52) வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் இத்தீர்ப்பு இன்று (13.03.2014) பகல் வழங்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த பாருக் மொஹமட் சாலித் என்ற நபர் , அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு குறைவான பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பாடசாலை ஊடாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து , குறித்த நபர்மீது நானு ஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீPதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டுவந்த நிலையில், வழக்கிற்கான தீர்ப்பு இன்று (13.03.2024) வழங்கப்பட்டது. இதன்போது […]
மலையகத்தில் தரம் 5 மாணவியை துஸ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை தீர்ப்பளித்துள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இத் தண்டனையை வழங்கியுள்ளார். கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை […]
வழக்கிலிருந்து சிவாஜிலிங்கம் விடுதலை-கொழும்பு நீதிமன்று அதிரடி..!
குறித்த வழக்கில் பயங்கரவாத தடைச் சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்துக்கு முரணானவை என தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து நேற்று வியாழக்கிழமை முற்றாக விடுதலை செய்து தீர்ப்பளித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் தியாகி திலீபன் நினைவு கூருவதாக தீ சட்டிப் பந்தம் ஏந்தி பதாகைகள் உட்பட தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைகூர்ந்தமை பயங்கரவாத தடை சட்டம் ஒழுங்கு விதிகளுக்கு […]
வழக்கிலிருந்து சிவாஜிலிங்கம் விடுதலை-கொழும்பு நீதிமன்று அதிரடி..!
குறித்த வழக்கில் பயங்கரவாத தடைச் சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்துக்கு முரணானவை என தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து நேற்று வியாழக்கிழமை முற்றாக விடுதலை செய்து தீர்ப்பளித்தது.கடந்த...
சாந்தனின் உடலத்தை இலங்கைக்கு அனுப்ப கோரி சென்னை நீதிமன்று அதிரடி உத்தரவு..!
உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், 27-ம் திகதி உயர் […]
மலையகத்தில் 14 வயது சிறுவனை 3 முறை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
வலப்பனை – மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதி மன்றம் 07 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை (27) செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினார். HCR/05/2017 இலக்கம் கொண்ட இந்த வழக்கு 2017 ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களாக நுவரெலியா மேல் […]