Tag: அதிரும்
அதிரும் தென்னிலங்கை-மற்றுமொரு துப்பாக்கி வேட்டு..!
நவகமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடையின் முன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிரும் தென்னிலங்கை-சற்று முன் ஒருவர் பலி..?
அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிரும் தென்னிலங்கை-சற்று முன் ஒருவர் பலி..?
அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னிலங்கையில் அதிரும் துப்பாக்கி வேட்டு-சுகாதார பரிசோதகர் பலி..!
எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கரந்தெனிய பிரதேச பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றி வந்த 51 வயதுடைய ரொஷான் குமார விதானகே என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் […]
கொழும்பில் அதிரும் துப்பாக்கி வேட்டுக்கள்-இன்றும் ஒருவர் பலி..!
இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கி சூடு – வெல்லே சாரங்கவின் உறவினர் டொன் சுஜித் பலி. மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இன்று (21) காலை 7.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட […]
துப்பாக்கி வேட்டுக்களால் அதிரும் கொழும்பு-குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..!
கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முகத்துவாரம் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக […]