Tag: அதிர்ச்சி
இலங்கையில் விவகாரத்து தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல்மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு மாத்திரம் நீதிமன்றங்களில் 48,391 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார். சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய […]
மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த தந்தை-மீட்கப்பட்ட சடலங்கள்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரின் சடலங்களும் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திலும் இணை பிரியா தம்பதியினர்-முன்னாள் பிரதமர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!
மரணம் நம்மை பிரிக்கும் வரை இணைபிரியா தம்பதிகளாக வாழ வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், முன்னாள் நெதர்லாந்து பிரதமர் ட்ரைஸ் வான் ஆக்ட் (Dries van Agt) மற்றும் அவரது மனைவி யூஜெனி (Eugenie) ஆகியோருக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக ஒன்றாக கழித்ததை போலவே ஒன்றாக இந்த வாழ்க்கையில் இருந்து விடைபெறுவது நோக்கமாக இருந்துள்ளது. இதன்படி, 93 வயதான இந்த தம்பதி இந்த மாதம் முதல் பகுதியில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருவரும் கைகோர்த்து இறந்ததாக […]
நுண்கடன் திட்டங்களில் சிக்கி தவிக்கும் கிராமப்புற மக்கள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
நுண்நிதிய கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் சுமார் 28 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 முதல் 48 சதவீதம் என்ற அடிப்படையில் அதிக வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. நுண்கடன் திட்டங்களினால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்கடன் திட்டங்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளது எனப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நுண்நிதிய பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார […]
முல்லைத்தீவு மாணவி மரணம்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் 12.02.2024 நேற்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர வகுப்பு மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் […]
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டும் பெண்கள்-சற்று முன் பொலிசார் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
பொலிஸாரின் புதிய புள்ளிவிபரங்களின் பிரகாரம், போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு, இணைந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ் போதான வைத்தியசாலையில் குழந்தைகள் இறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சிறுநீர் கழிப்பதற்காக மரத்தடிக்கு சென்ற பொலிஸ் பரிசோதகருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கடுமையாக தாக்கப்பட்டதாக (பொலிஸ் பரிசோதகர்) ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாக அடி வாங்கிய பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் […]
கில்மிஷா,அசானி இருவரும் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்ற கில்மிஷா,அசானி உள்ளிட்டவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இந்ந பயணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் கில்மிஷா,போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் மற்றும் பார்வையாளர்கள் தேர்வான அசானி ஆகியோர் ஜேர்மனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இத்தகவலை கில்மிஷா தனது முகநூலில் பகிர்ந்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.