Tag: அன்னை
பூனைத்தொடுவாய் லூர்த்து அன்னை ஆலய பெருவிழா..!{படங்கள்}
பூனைத்தொடுவாய் லூர்த்து மாதா ஆலய பெருவிழா இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 07.00 ஆரம்பமான குறித்த திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெயராஜ் ஒப்புக் கொடுத்தார். தொடர்ந்து லூர்த்து அன்னையின் திருச்சுருபம் பவனியாக எடுத்துவரப்பட்டதோடு அதன்பின் கொடி இறக்கப்பட்டு அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. லூர்த்து அன்னையின் பெருவிழாவில் பலர் கலந்து கொண்டு இறையாசி வேண்டிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தோன்றிய அன்னை மேரி-விபரங்களை வெளியிட்ட பொலிசார்..!
சமூக வலைதளங்களில் பல்வேறு மதங்களின் அடையாளப் பாத்திரங்கள் குறித்தும், அவர்களை உயிருடன் பார்க்கும் வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் நடந்த இதுபோன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கத்தோலிக்க மதத்தின் பிரதான பாத்திரமான இயேசுவின் தாயாக கருதப்படும் ‘அன்னை மரியாள்’ உருவத்தை ஒத்த உருவம் கொண்ட பெண் ஒருவர் கந்தானை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் காணொளியே இதற்கு காரணம். அடையாள விபரங்களை வெளிப்படுத்திய பொலிஸார் கத்தோலிக்கர்கள் வழிபடும் ‘அன்னை […]