Tag: அன்மையில்
அன்மையில் திருமணமான இளைஞன் பலி-கதறி துடிக்கும் மனைவி..!
கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் திருமணமான இவரும் இவரது மனைவியும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரம் விநியோகம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நெடுந்தீவுக்கு அன்மையில் கைது செய்ப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை..!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை […]