Tag: அமைச்சர்
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – அமைச்சர் டக்ளஸ் –
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட […]
யாழ் மாவட்ட வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்!
போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார். கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர் அவ்வப்போது வெளியிடும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், எமது மாவட்டங்களில் காணப்படும் வளங்களை பயன்படுத்தி அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்பும் நோக்ககோடு, விஞ்ஞான ஆய்வுகள் மூலம் சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்து மேற்கொள்ளப்படும் கடலட்டை பண்ணைகளை எழுந்தமானமாக விமர்சிப்பதன் மூலம் எமது மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் சூரிய மின்சக்தி திட்டம்-எரிசக்தி அமைச்சர் சொல்வதென்ன..!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி அபிவிருத்தியால் அனலைத் தீவு,நெடுந்தீவு மற்றும் நயினாத்தீவு பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு மாகாணத்தில் […]
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் ..!
வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்த இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்தியான சேவைக்காலங்களைப் பூரணப்படுத்தி, முறையாக விண்ணப்பித்து, அதனை கல்வி வலயங்களும் மாகாணமும், ஆசிரிய இடமாற்ற சபைகளும் அங்கீகரித்ததன் பின்னர் இடமாற்றம் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வெளிப்படுத்த வேண்டும். என […]
அஸ்வெசும தரவுகள் சரிபார்ப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் […]
(கனகராசா சரவணன்)) 1948 இனங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து அரசியல் செய்ததால் நாட்டில் சமாதானம் இல்லாமல் போய்விட்டது...
இந்த நாட்டை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காக தமிழர், சிங்களவர் பறங்கியர், முஸ்லீம்கள் மலேயர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து 1948 சுதந்திரத்தை பெற்ற போதும் 1972ம் ஆண்டு அரசியல் அமைப்பை மாற்றி பூரண சுதந்திரத்தை பெற்றோம். இந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்;து நாசமாக்கி அரசியல் செய்;தார்கள் இதனால் நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது எனவே எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் […]
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் சொன்ன தகவல்..!
பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக உடைந்து போனோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் முறைமையின்படி அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் பெறுமதி பெறப்பட்டதுடன் அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 8,299 மில்லியன் ரூபாவாகும். மேலும் சுயாதீன மதிப்பீட்டாளரிடமிருந்து பெறப்பட்ட மதிப்பீட்டின் ஆரம்ப முதலீட்டு அறிக்கையை சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் சமர்ப்பித்திருந்தார். அதன் மதிப்பீடு 3,256 மில்லியன் ரூபாவாக […]
மக்கள் கசிப்பு குடிக்காமல் சராயம் குடிக்க வேண்டும்-தயவு செய்து விலைகளை குறையுங்கள்-குடிமகன்களுக்காக சபையில் முழக்கமிட்ட அமைச்சர்..!
புத்தாண்டுக்கு முன்னதாக சாமானியர்கள் அருந்தும் சிறப்பு சாராயத்தின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். சாராயத்தின் விலைகள் அபரிமிதமாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் மக்கள் கள்ளச்சாராயத்தை (கசிப்பு) குடிக்க முனைவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சாராய விலை உயர்ந்துள்ளது. மக்கள் தற்போது கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். மதுக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் தினமும் ‘கசிப்பு’ குடிக்க முடியாது. புத்தாண்டுக்கு ‘சாராயம்’ குடிக்க வேண்டும்,” என அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். […]