Tag: அம்பாறை
மற்றுமொரு மாணவனின் சடலமும் சற்று முன் மீட்பு..!{படங்கள்}
அம்பாறையில் நேற்றையதினம் கடலில் மூழ்கி மாயமான பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மாளிகைக்காடு – சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர். அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன. மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய […]
போக்குவரத்து அமைச்சருக்கு அல்வா கொடுத்த அம்பாறை அதிகாரிகள்..!
இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாறை டிப்போ அதிகாரிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அல்வா கொடுத்த சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளது. பழுதடைந்த பேரூந்துகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட 400 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் தலைமையில் நடைபெற்றது. அதற்காக அம்பாறை டிப்போவின் NB-5430 எனும் பதிவெண் கொண்ட பேரூந்து திருத்தியமைக்கப்பட தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான உதிரிப்பாகங்கள் கொள்வனவுக்கு 4 […]
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல்..!{படங்கள்}
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல். மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும். இந்த நிகழ்வில் […]
அம்பாறை ஆசிரியர்களுக்கு இடமாற்றமில்லை
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுநருடன் பேசி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் யாரும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்கலாக எந்த மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் கறுப்பு தின போராட்டம்!
இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள்...