Tag: அரச
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், […]
அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளின் அசமந்தம் – உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கும் பயணிகள்!
அண்மைக் காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிர்களும் பறிபோயுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டன. இதன்போது பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. எத்தனையோ விபத்துக்கள இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் […]
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு முகமாலை மக்கள் செய்த சிறப்பான வேலை!
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய தினமும் 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது. 7.30க்கு பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர். மன உலைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண […]
கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தர் ! நடந்தது என்ன ?
கிளிநொச்சியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் இருந்த அரச உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின் விடுவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் யுவதியொருவரும் அரச உத்தியோகத்தர் ஒருவரும் கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். இதன்பின் அதை பார்த்த சிலர் இருவரும் அலுவலகத்துக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளிவராததை தொடர்ந்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைடுத்து அங்கு வந்த பொலிஸார் வெளியில் வருமாறு கூறியுள்ளனர். நபர் மட்டும் வெளியில் வந்து தன்னை ஒரு அரச உத்தியோகத்தர் என அடையாளப்படுத்திக்கொண்டார். மேலும் வேறு யாரேனும் உள்ளார்களா என கேட்டபோது தனது தோழி உள்ளார் எனவும் இந்த அலுவலகம் அவரது அலுவலகம் எனவும் மாலை நேரங்களில் அதில் அவல் ஓய்வு எடுக்க வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அத்தோழி மலசலக்கூடத்தை பயன்படுத்த வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் விசாரணைசெய்ததைத்தொடர்ந்து அப்பெண் 20 வயது மாணவி என தெரியவந்துள்ளது. […]
அரச உத்தியோகத்தர்கள் இடமாற்றம் தொடர்பில் வெளியான தகவல்..!
மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுச்சேவை ஆணைக்குழு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண பொதுச் சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற அதிகாரி ஒருவரின் கோரிக்கையை மத்திய அரசில் உரிய பதவிக்கு மாற்றலாம் என்று 2020 ஆம் ஆண்டு […]
கழண்டோடி கால்வாய்க்குள் தஞ்சமடைந்த அரச பேரூந்து ரயர்-பதறிய பயணிகள்..!{படங்கள்}
ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸின் டயர், ரம்புக்பிட்டிய பகுதியில் வைத்து கழன்று சென்றுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச்சம்பவத்தால் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேருந்தின் அவலநிலை..!{படங்கள்}
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மன்னார் மாவட்ட போக்குவரத்து சாலை பேருந்துகளின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதுடன் தூர பிரயாணங்களின் போது பேருந்துகள் நடுவீதியில் அடிக்கடி பழுதடை வதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணத்திற்கு தகுதியற்ற பேருந்துகள் அதிக அளவில் சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக […]
அரச நிறுவனங்களின் சம்பள அதிகரிப்பு-அமைச்சர் வைத்த செக்..!
அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் […]
அரச சேவைக்கு புதிய பொறிமுறை..!
அரசாங்க சேவையில் சர்ச்சைகளைத் தடுப்பதற்கும் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபையின் பிரதம செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களின் தலைவர் ஆகியோருக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்டில் உயர்தர அரச சேவையை கட்டியெழுப்புவது மற்றும் […]
அரச சேவைக்கு புதிய பொறிமுறை..!
அரசாங்க சேவையில் சர்ச்சைகளைத் தடுப்பதற்கும் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபையின் பிரதம...