Tag: அஸ்வெசும
அஸ்வெசும நலன்புரித் திட்டம் இரண்டாம் கட்டம் – விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் 22 ஆம் திகதி (சனிக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்துக்காக இதுவரையில் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதலாம் கட்ட பெயர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற 1,227000 முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீட்டில் 212,000 முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகள் ஒரு தரப்பினரால் தொடர்ந்து தாக்கல் […]
அஸ்வெசும திட்டத்தில் இணைக்கப்படவுள்ள மேலும் பலர்..!
மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உதவி பெறும் மாற்று திறன்களைக் கொண்ட 410,000 பேருக்கு தலா 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக உதவி பெறும் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. […]
அஸ்வெசும தொடர்பில் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர், இதனை குறிப்பிட்டார். அவ்வாறு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், சட்டத்தின் பிரகாரம் குறித்த நபர்களுக்கு […]
அஸ்வெசும தொடர்பில் வெளியான பெருமகிழ்ச்சி தகவல்..!
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, அஸ்வெசும திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000...
அஸ்வெசும பயனாளிகளுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல்..!
அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் அந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் , ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற அஸ்வெசும திட்டம் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி-7000 பேருக்கு நேர்ந்த கதி..!
அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு கட்டங்களாக செயற்படுத்தப்படுகின்றது. இவற்றில் குறைந்த வருமானம் பெறுவோர், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் போலியான தகவல்களை வழங்கி நிவாரணம் பெற்று வந்த ஏழாயிரம் பேர் தற்போதைக்கு அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அஸ்வெசும தரவுகள் சரிபார்ப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் […]
அஸ்வெசும இரண்டாம் கட்டம் சற்று முன் வெளியான தகவல்..!
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று (27) இடம்பெற்ற வேலையின்மை தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே நிவாரண உதவிகளைப் பெற்று வருவதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பதாரர்களுடன் 2.4 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே நோக்கமாகும் என்றும் கூறியுள்ளார். இரண்டாம் […]
அஸ்வெசும விண்ணப்ப படிவம்-300 ரூபாவா-மலையகத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!
மக்கள் குற்றச்சாட்டு அஸ்வெஸ்ம நலன் புரி சம்பந்தமான இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் கடந்த 15 ம் திகதி முதல் நாடு முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வதற்கு சில குள்ள நரிகள் முன்னூறு ரூபாய் பணம் பொது மக்களிடமிருந்து வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்த ஒருவர் கூறுகையில் குறித்த நபர்கள் அஸ்வெஸ்ம விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தாங்களே பொறுப்பு தாரிகள் […]
அஸ்வெசும இரண்டாம் கட்டம்-இனி இது முக்கியம்-சற்று முன் வெளியான தகவல்..!
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். முதற்கட்டத்தின் கீழ் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.