Tag: ஆலய
திருக்கோணேஸ்வர ஆலய பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு!
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பில் பாரிய முருகல் நிலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஆலய காரியாலயத்தில் இடம்பெற்றது. திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக சபை தெரிவு மற்றும் நிர்வாக சபையை ரத்துச் செய்வது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் போடப்பட்ட வழக்கில் தங்களுக்கு எந்தவொரு கட்டாணைகளோ கட்டளைகளோ அறிவித்தல்களோ வழங்கப்படவில்லை என கோயில் நிர்வாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார். திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாகசபைக்கெதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (10)விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் 2023ம் ஆண்டின் நிருவாக தெரிவில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையை ரத்துச் செய்ய கோரி இரண்டு இடைபுகு மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது ஆனால் எமக்கு இது தொடர்பான எந்தவொரு கட்டாணைகளோ கட்டளைகளோ அறிவித்தல்களோ மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்படவில்லை, இது இவ்வாறிருக்க கௌரவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா […]
திருமரையில் சைவ ஆலய வழிபாட்டை தடுத்து நிறுத்திய முப்படையினர்..!
திருகோணமலை முருகன் ஆலயத்தில் பூஜை வழிபடுகளை நடத்துவதற்கு முப்படையினர் தடைவித்துள்ளனர். மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு திருகோணமலை, தென்னமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் இடம்பெறுவது வழமை. இவ்வாறான நிலையில், இம்மாத பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்களே, முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த முருகன் ஆலயப் பகுதி பௌத்த விகாரைக்கு உரியது எனவும் நீநிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தே பெதுமக்கள் முப்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் […]
பூனைத்தொடுவாய் லூர்த்து அன்னை ஆலய பெருவிழா..!{படங்கள்}
பூனைத்தொடுவாய் லூர்த்து மாதா ஆலய பெருவிழா இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 07.00 ஆரம்பமான குறித்த திருவிழா நிகழ்வில் திருநாள் திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெயராஜ் ஒப்புக் கொடுத்தார். தொடர்ந்து லூர்த்து அன்னையின் திருச்சுருபம் பவனியாக எடுத்துவரப்பட்டதோடு அதன்பின் கொடி இறக்கப்பட்டு அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. லூர்த்து அன்னையின் பெருவிழாவில் பலர் கலந்து கொண்டு இறையாசி வேண்டிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழில் ஆலய பிணக்கு காரணமாக உண்ணாவிரதம்..!{படங்கள்}
ஆலய பிணக்கு ஒன்றினை அடுத்து, வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தம் (தம்பா) நீராகாரம் ஏதுமின்றி கடந்த திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதம் இன்று காலை நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடாத்தாமாறு வலியுறுத்தி […]
வண்ணை ஸ்ரீ வீரமாகாளி ஆலய இரதோற்சவம்.!
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 01.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இன்றையதினம் இரதோற்சவமும், நாளை 09.02.2024 தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, 10.02.2024 மாலை அலங்கார பூந்தண்டிகை உற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும். தேர்த்திருவிழாவுக்காக, பல்வேறு இடங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.