Tag: இடம்
வெளிநாடு ஒன்றில் இடம் பெற்ற கோர விபத்து-இரு இலங்கையர்கள் பலி..!
தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலி கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் இடம் பெற்ற கோர விபத்துக்கள்-பெண் உட்பட எழுவர் பலி..!
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (04) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். களவாஞ்சிகுடி – குருமன்வெளி வீதியில் எருவில் காயல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலியால […]
யுத்தம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் ஆக்கிரமிப்பு இடம் பெறுகிறது..!
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து சுமார் 15 வருடங்களையும் கடந்து உள்ளது.ஆனால் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் காணிகள் ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார். ‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்கும் […]
மாங்குளத்தில் வீதியில் இடம் பெற்ற கொடூர கொலை..!
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இ;வாறு உயிரிழந்துள்ளார் இவரது உடம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.