Tag: இடம்பெற்ற
அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி
கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு வீடு ஒன்று சோதனையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். பதிலடித் தாக்குதல்களில் சந்தேக நபர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, துப்பாக்கிகள் மற்றும் […]
உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்து!
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இன்று ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி செயழிலந்த நிலையில் அதனை பரிசோதித்தபோது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!
கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், டிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பன்முகச் சந்தை !
பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களின் பன்முகச் சந்தை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிரிசாலிஸ் ( chrysalis) நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பன்முகச் சந்தை நிகழ்வை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது பெண்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள்இகைவினைப் பொருட்கள்இசுவையூட்டி வைககள்இபசுமை உற்பத்திகள்இகாட்சிப்படுத்தப்பட்டதோடு விற்பனையும் இடம் பெற்றது. இதன் போது வணிக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் கிரிசாலிஸ் ( chrysalis) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக இடம்பெற்ற இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு..!{படங்கள்}
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு நேற்று (06) ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி யாமினி சசீலன் அவர்களது ஒழுங்குபடுத்தலில் குறித்த இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது . மாவட்ட விவசாய பயிற்சி நிலைய […]
மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு..!{படங்கள்}
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34) உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று திங்கட்கிழமை (04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு […]
முல்லைத்தீவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி..{படங்கள்}
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024) மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகமும், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகமும் பலபரீட்சையில் மோதின. நவஜீவன்ஸ் அணியினர் கடுமையாக போராடியும் துரதிஷ்டவசமாக எந்தவித கோல்களையும் போட முடியவில்லை. போட்டி நிறைவில் மயிலங்காடு ஞானமுருகன் […]
முல்லைத்தீவில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி போட்டி
இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென் ஜூட்ஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்தும் அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 09 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டியின் இறுதி போட்டியானது இன்று (03.03.2024)...
மாங்குளத்தில் வீதியில் இடம் பெற்ற கொடூர கொலை..!
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இ;வாறு உயிரிழந்துள்ளார் இவரது உடம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
மலையகத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் திருவிழா..!{படங்கள்}
ராகலை டெல்மார் மேற்பிரிவு தோட்டத்தில் மதுரைவீரன் மூன்று நாள் திருவிழாவாக இடம்பெற்றது. இதில் மூன்றாவது நாளாக காவடி,கற்பூர சட்டி மருத வீரனின் கத்தி ஏந்தியவாறு போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.