Tag: இருந்து
பிரான்ஸில் இருந்து திருமண கனவுடன் வந்த இளைஞனை ஏமாற்றி இன்னொருவனுடன் பறந்த கிளிநொச்சி யுவதி
பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பொலிசாரிடமும் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு பிரான்ஸ் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த பெப்ரவரி மாத தொடக்கப் பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட பிரான்சில் வசிக்கும் 36 வயதான […]
ஹோட்டல் அறையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!
பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, சந்தேக நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவரே நேற்று (12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண் ஆண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர். இதன்போது, குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்த வௌ்ளத்துடன் சடலமாக காணப்பட்டதாகவும், சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் […]
ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப வழி செய்ய வேண்டும்..!
கட்சியின் தலைவர் சி.வேந்தனால் இன்று (06.03.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது நியாயங்களையும் அறை கூவல்களையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என தமிழினம் கருதுகிறது. ஈழத்தமிழர்களதும் இந்தியாவினதும் சமூக அரசியல் பொருளாதார பாதுகாப்பு உறவுநிலைகள் பன்னெடுங்கால வரலாற்றுக்கு உரியவை . அந்த உரித்தின் அடிப்படையில்தான் இலங்கை, இந்திய ஒப்பந்தம் உருவானது. இந்தியா தனது பிராந்தியத்தின் நலன் மற்றும் ஈழத்தமிழினத்தின் பாதுகாப்பு அரசியல் உரிமை என்பவற்றை கருத்தில் […]
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேருந்தின் அவலநிலை..!{படங்கள்}
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மன்னார் மாவட்ட போக்குவரத்து சாலை பேருந்துகளின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதுடன் தூர பிரயாணங்களின் போது பேருந்துகள் நடுவீதியில் அடிக்கடி பழுதடை வதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணத்திற்கு தகுதியற்ற பேருந்துகள் அதிக அளவில் சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக […]
பொலிசாரிடம் இருந்து தப்பிக்க கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி..!
மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர். யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது, அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார். பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ […]
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சைக்கிள் ஓடுவதற்கு வந்த குழு..!{படங்கள்}
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். அந்தவகையில் யாழ்ப்பாண இந்தியத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்களை சந்தித்தனர். அழகான இலங்கை தீவு முழுவதும் அவர்களின் சைக்கிள் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என யாழ்ப்பாண இந்தியத்தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்கள் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். […]
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சைக்கிள் ஓடுவதற்கு வந்த குழு
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம்...
கணவன் இறந்த அதிர்ச்சி-மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த மனைவி..!
டெல்லியில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகத்தில், மனைவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, இளைஞர்கள் திடீர் திடீரென உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. […]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கல்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தொடர்பாக நேற்றையதினம் விஞ்ஞான பீட பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை […]
ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய 66இலங்கையர்கள்
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் […]