Tag: இருவருக்கிடையில்
50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் மீது கத்திக்குத்து!
50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்