Tag: இலங்கையில்
இலங்கையில் இளம் ஆசிரியைக்கு கணவன் செய்த கொடூரம்..!
காலி – மெதவல பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியின் இரு கால்களையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் 34 வயது பெண்ணாவார். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் கணவன் தனது மனைவியின் இரு கால்களையும் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கணவர், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் […]
இலங்கையில் மிரட்டவுள்ள 3000 சீனர்கள்..!
சீன நாட்டிற்கு வெளியே சீனர்கள் கலந்து கொள்ளும் மரதனோட்டப் போட்டி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதிவரை ரத்மலானை தொடக்கம் பேருவளை வரையான கடலோரப் பாதையில் குறித்த மரதனோட்டப் போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் கலந்துக்கொள்ள 3000 சீனர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர்.
இலங்கையில் முகநூல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் முகநூல் தொடர்பில் கடந்த 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல தெரிவித்துள்ளார். இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான 10774 சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 5188 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியின்றி முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் 7499 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதி […]
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 […]
இலங்கையில் விவகாரத்து தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல்மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு மாத்திரம் நீதிமன்றங்களில் 48,391 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
இலங்கையில் வருடாந்தம் 250 முதல் 300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார். சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய […]
இலங்கையில் தோன்றிய அன்னை மேரி-விபரங்களை வெளியிட்ட பொலிசார்..!
சமூக வலைதளங்களில் பல்வேறு மதங்களின் அடையாளப் பாத்திரங்கள் குறித்தும், அவர்களை உயிருடன் பார்க்கும் வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இலங்கையில் நடந்த இதுபோன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கத்தோலிக்க மதத்தின் பிரதான பாத்திரமான இயேசுவின் தாயாக கருதப்படும் ‘அன்னை மரியாள்’ உருவத்தை ஒத்த உருவம் கொண்ட பெண் ஒருவர் கந்தானை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் காணொளியே இதற்கு காரணம். அடையாள விபரங்களை வெளிப்படுத்திய பொலிஸார் கத்தோலிக்கர்கள் வழிபடும் ‘அன்னை […]
தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையில்
தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lk-வின் பகுப்பாய்வு அறிக்கையில், 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்தியபோது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் பகுப்பாய்வின் […]
கஞ்சா பயிரிட இலங்கையில் அனுமதி
ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் மகிழ்ச்சியடைகின்றேன் என்று டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்
இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி மரணமடைந்துள்ளார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தகவல்...