Tag: இளம்
இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் அராலியில் மீட்பு!
23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றையதினம், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது.
காணி ஒன்றில் சடலமாக கிடந்த இளம் குடும்பஸ்தர்..!
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் கணவனால் கைவிடப்பட்ட இளம் தாய் மற்றும் மகன் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைப்பு..!
வவுனியாவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதிக்குள்ளான இளம் தாய் மற்றும் விசேட தேவையுடைய 07 வயது மகன் ஆகியோர் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் ஆராய்ந்து வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய அபயம் பிரிவினரால், வவுனியா பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக செயற்பட்ட வவுனியா பிரதேச செயலாளர், குறித்த சிறுவனையும், இளம் […]
பாலியல் வன்கொடுமை-முறைப்பாடு செய்த இளம் பெண் மீது துப்பாக்கி சூடு..!
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட நபரால், துப்பாக்கியால் சுட்டப்பட்ட 25 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார். இவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த ராஜேந்திர […]
பாலியல் வன்கொடுமை – முறைப்பாடு செய்த இளம் பெண் மீது துப்பாக்கி சூடு..!
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட நபரால், துப்பாக்கியால் சுட்டப்பட்ட 25 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு...
யாழை உலுக்கிய மற்றுமொரு சோகம்-ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி..!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே […]
கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன் 22வது இளம் அழகி கைது..!
இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு, கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் மூத்த சகோதரன், கடந்த வருடம் இராணுவத்தில் […]
கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன் 22வது இளம் அழகி கைது..!
கொழும்பில் இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு, கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5...
மட்டக்களப்பில் ஐந்து மாத குழந்தையை வீட்டிலா தவிக்கவிட்டு ஓடிய இளம் ஜோடி..!
மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ஜோடி, ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். குறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,, அதாவது இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு தலைமறைவாகிவிட்டனர். பின்னர் அங்கிருந்து ரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த போது […]
ஐந்து மாத குழந்தையை வீட்டில் தவிக்கவிட்டு ஓடிய இளம் ஜோடி..!
மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ஜோடி, ஐந்து மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர்.
குறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அதாவது இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு...