Tag: இளைஞனுக்கு
யாழில் வெடித்த இடியன் துப்பாக்கி – இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!
பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பொல்பிதிகம, வதுருஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞராவார். பொலிஸார் விசாரணைகளில் உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. சம்பவ தினத்தன்று இவர் கிணற்றில் நீராடுவதற்கு தனியாக சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மோட்டாரில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த பயங்கரம்..!
வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை வழியே மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரை, அரியாலை பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. அவ்வேளை, மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு இளைஞர் கும்பலிடமிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூட்டத்தினர் அங்கிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த […]
யுவதியிடம் நிர்வாணமாக நின்று ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி..!
யுவதியிடம் தன்னை நிர்வாணமாக காண்பித்து கையடக்கத் தொலைபேசி மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞராவார். இவர் யுவதி ஒருவருக்கு தன்னை நிர்வாணமாக காண்பித்து யுவதியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியாவில் 22 வயது இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்..!
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு வகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர். இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் (13.02) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் […]
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட வந்த இளைஞனுக்கு அம்மன் கொடுத்த தண்டனை.!!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முற்பட்டவரை பாம்பு தீண்டியுள்ளது.இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.குறித்த திருடன் அங்கு பொருத்தப்பட்ட CCTV கமராவின் பிரதான இணைப்பு பெட்டியின் மூடியை திறந்து இணைப்பை...
மாடுகளை காப்பாற்றச்சென்ற இளைஞனுக்கு எமனாக வந்த முதலை
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை நேற்று முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாடுகள் கிட்டங்கி வாவியில்...