Tag: இளைஞன்
வட்டு இளைஞன் படுகொலை ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காண்பித்த மனைவி
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் 06 பேரை கைது செய்துள்ளனர். […]
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!
கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில், வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், டிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இளைஞன் செய்த மோசமான காரியம்
கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் 11.03.2024 திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2Kg கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்
தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-20 வயது இளைஞன் பலி..!{படங்கள்}
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர் ஒருவரின் பிறந்த நாளிற்கு சென்றுவிட்டு வருகை தந்த நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு […]
வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது சுவரின் ஒரு பகுதி திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு […]
வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த...
மற்றுமொரு விபத்து-23 வயது இளைஞன் பலி..!
ரயிலில் மோதி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (29) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில், இளைஞன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழர் பகுதியில் மற்றுமொரு சோகம் தாமரை பூ பறிக்க சென்ற இளைஞன் பலி..!
திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை நண்பருடன் தாமரைப் பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கியதுடன் நண்பனை காப்பாற்ற முடியாத நிலையில் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு […]
கட்டழகு உடலுக்கு ஆசைப்பட்டு இளைஞன் செய்த உயிர் போகும் காரியம்..!
உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக இளம் வயதினர் மத்தியில் வழக்கமான உணவூட்டத்துக்கு பாலும் சத்து மாத்திரைகள், பவுடர்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது. புரோட்டின் பவுடர் அவற்றில் முதலிடம் வகிக்கிறது. இது தவிரவும் உடற்பயிற்சி செய்பவர்கள் இதர ஊட்டங்களுக்காக, மருத்துவர் ஆலோசனையின்றி தாமாக எதையேனும் உட்கொள்ளும் போக்கும் அதிகம் நிலவுகிறது. புது டெல்லியில் பாடி பில்டராக விரும்பிய 26 வயது இளைஞர் ஒருவர் துத்தநாகம் சத்துக்காக விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கட்டழகு தேகத்துக்காக ஆசைப்பட்ட அந்த […]
பழைய தகராறு முற்றியதில் 20 வயது இளைஞன் துடிதுடிக்க அடித்து கொலை..!
பழைய தகராறு ஒன்றை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இளைஞன் ஒருவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ஹபராதுவ கஹவெனகம அம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (26) இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தரப்பினர் இளைஞனை தடி உள்ளிட்ட பொருட்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிஹிரிபன்ன, தல்பே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக […]