Tag: உயிரிழந்த
யாழில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான முழுமையான விபரம்..!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த ஏ.நிஷாந்தன் என்ற 29 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கோர விபத்தில் உயிரிழந்த யாழ் பலகலைகழக மாணவன் தொடர்பில் சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!{படங்கள்}
யாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று (21) விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த ரமேஸ் சகீந்தன் (22) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழந்த […]
சத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை நீதிமன்றின் உத்தரவு..!
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, […]
மன்னாரிலும் நீதிமன்றிற்கு முன் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம்..! {படங்கள்}
மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் குறித்த கிராம மக்கள் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுமியின் மரணத்திற்கு தாமதம் இன்றி நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று திங்கட்கிழமை […]
மர்மமாக உயிரிழந்த மகன்-துயரத்தில் தந்தை எடுத்த முடிவு..?
அனுராதபுரத்தில் மகன் திடீரென உயிரிழந்தமையை தாங்க முடியாத தந்தை உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், எப்பாவல, கட்டியாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உடற்கட்டமைப்பாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி குறித்த இளைஞன் தனது வீட்டின் முன் விழுந்து கிடந்த நிலையில், அவரது இளைய சகோதரர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். […]
இலங்கையில் கழுத்து துண்டிக்கப்பட்டு உயிரிழந்த பெண்-அதிர்ச்சி தகவல்..?
பிங்கிரிய பிரதேசத்தில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய, விலத்தவ, கொடெல்லயாய பகுதியைச் சேர்ந்த டர்சி பெர்னாண்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவர் வீட்டினுள் இருப்பதாக பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், காயமடைந்த பெண்ணை 1990 அம்புலன்சில் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் […]
அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த கணவர்-சாட்சியங்களை சமர்ப்பித்த மனைவி..!
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து நாட்களுக்குள் மூன்று தடவை ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் (RAH) உதவியை நாடிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் தோற்று பரவலின் போது ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் உதவியை 23 வயதுடைய இலங்கை பிரஜையான சசிந்தா பட்டகொடகே எனும் இளைஞர் கோரியுள்ளார். குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னதாக இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுத்துள்ளதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டி இந்த […]
உயிரிழந்த அடுத்தநாளே உயிர்த்தெழுந்த இந்திய நடிகை பூனம் பாண்டே
புற்றுநோய் காரணமாக பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே உயிரிழந்துவிட்டார் என்று நேற்று முன் தினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ‘நான் இறக்கவில்லை. உயிரோடு தான் இருக்கிறேன்’ என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...
பிறந்து இரண்டு மணத்தியாலங்களில் உயிரிழந்த சிசு!! பிரசவித்த இளம் குடும்பப் பெண்ணும் திடீரென உயிரிழப்பு!
குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும்...
வடமராட்சி பகுதியில் விபரீத முடிவால் உயிரிழந்த பாடசாலை மாணவன்
யாழ் நெல்லியடி மத்திய கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .துன்னாலை வடக்கு பகுதியில் இச் சம்பவம்...