Tag: என்ன?
அவசரமாக யாழில் கடையை போடும் ரணில்-காரணம் என்ன..?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து இரு மாவட்டங்களிலும் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவையொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
யாழில் கசிப்புடன் கைதாகிய அழகிக்கு நீதிமனாறில் நடந்தது என்ன..?
யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைதான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் 1500 மில்லி லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைதான பெண் விசாரணைகளுக்குப் பின்னர், நேற்றைய தினம் புதன்கிழமை (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அந்தப் பெண் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, கடுமையாக எச்சரித்த நீதவான், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்தார்.
மன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு-நீதிமன்றில் நடந்தது என்ன..?
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் […]
தந்தையின் உயிர் அணுக்களில் குழந்தை பெற்ற மகன்-நடந்தது என்ன..?
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் , தமது தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தி தன் மனைவிமூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கு தொடுத்து நிலையில் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினரிடையே குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மாறிவரும் வாழ்வியல் சூழல்கள், உணவு முறைகள், பரவும் நோய்கள், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் எனப் பல காரணங்கள் […]
மன்னார் சிறுமி கொலை-சந்தேகநபருக்கு நீதமன்றில் நடந்தது என்ன..? {படங்கள்}
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை(17) மதியம் அனுமதி வழங்கியுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள […]
யாழில் ஐஸ்கிறீமில் இருந்த தவளை விவகாரம்-நீதிமன்றில் நடந்தது என்ன..?
யாழ்ப்பாணம் – செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட , விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது கடந்த புதன்கிழமை ஆலய சூழலில் குளிர்களி விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் குளிர்களிக்குள் தவளை ஒன்று காணப்பட்டது. அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதார பரிசோதகர் ஐஸ் கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். […]
நபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிசார்-நடந்தது என்ன..?
பொலிஸ் அதிகாரிகள் மூவர் சிரேஷ்ட பிரஜை ஒருவர் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவமொன்று உயர்நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. கொட்வின் பெரேரா என்ற 81 வயதான சிரேஷ்ட பிரஜை ஒருவரிடமே இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அதேபோன்று, நீதிபதிகள் விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மனுதாரருக்கும் பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மன்னிப்பு கோரியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு, கொட்வின் […]
யாழில் சற்று முன் குடும்பஸ்தர் கைது-நடந்தது என்ன..?
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர் அண்மைக்காலமாக கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் இவரை மருதங்கேணி பொலிசார் தேடிவந்தனர்.இன்றும் அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது மனைவி வேறு இடத்தில் […]
பாடசாலையில் திடீரென சுகயீனமுற்ற 18 மாணவர்கள்-நடந்தது என்ன..?
ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வெல்லவாய – மல்வத்தாவல பகுதில் உள்ள பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர். அப்பாடசாலையில் பயிலும் 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர். இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் […]
cervical most cancers – செர்வைகல் கேன்சர் – கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?
cervical most cancers - செர்வைகல் கேன்சர் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்
தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்த, ஆரம்ப நிலையில் கண்டறிந்து விட்டால் 95 சதவிகிதம் சரி...