Tag: எரிக்கப்பட்ட
யாழ் மத்தியில் தீ மூட்டி எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்..!{படங்கள்}
யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்! நேற்றிரவு, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீமூட்டி எரிக்கப்பட்டது. தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை உருட்டிச் செல்வது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புபட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.