Tag: ஐனாதிபதி
முன்னாள் நிதி அமைச்சருக்கு ஐனாதிபதி இறுதி அஞ்சலி..!
சிறந்த அரசியல்வாதியும் தலைசிறந்த பொருளாதார நிபுணருமான மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொள்ளுப்பிட்டி சார்ள்ஸ் டிரைவில் அமைந்துள்ள இல்லத்திற்கு நேற்று (28) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுதாபக் […]
ஐனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தன்னிடம் இல்லை எனவும் இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது. […]
ஐனாதிபதி செயலாளரின் அதிரடி தகவல்..!
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் கௌரவ நாமங்களுக்காக பயன்படுத்தப்படும் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக விருதுகள் மற்றும் சன்னஸ் பத்திரங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை […]
ஐனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கபடுமா-அம்மையார் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி; சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி; தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
ஐனாதிபதி தேர்தல்-அம்மையார் எடுத்த அதிரடி முடிவு..!
இந்த வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் ஜனாதிபதி தேர்தல் கூட்டணி தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் தீர்மானத்தை இதுவரை தான் எடுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு ஆதரவாக சந்திரிகா களமிறங்குகிறார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையை பொறுப்பேற்கவுள்ளார் என கடந்த […]