Tag: கசிப்பு
மக்கள் கசிப்பு குடிக்காமல் சராயம் குடிக்க வேண்டும்-தயவு செய்து விலைகளை குறையுங்கள்-குடிமகன்களுக்காக சபையில் முழக்கமிட்ட அமைச்சர்..!
புத்தாண்டுக்கு முன்னதாக சாமானியர்கள் அருந்தும் சிறப்பு சாராயத்தின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். சாராயத்தின் விலைகள் அபரிமிதமாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் மக்கள் கள்ளச்சாராயத்தை (கசிப்பு) குடிக்க முனைவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சாராய விலை உயர்ந்துள்ளது. மக்கள் தற்போது கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். மதுக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் தினமும் ‘கசிப்பு’ குடிக்க முடியாது. புத்தாண்டுக்கு ‘சாராயம்’ குடிக்க வேண்டும்,” என அவர் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். […]
பொது இடங்களில் கூவி கூவி கசிப்பு விற்பனை-தட்டி தூக்கிய பொலிசார்..!
மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டி நீர்கொழும்பு, கட்டான பிரதேசங்களில் மீன் விற்பனை என்ற போர்வையில் கசிப்பு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 200,000 ரூபா பெறுமதியான கசிப்பு கையிருப்புடன் இன்று (12) காலை கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 44 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் பல ஆண்டுகளாக இவ்வாறு கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் […]
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி- சந்தேகநபர் கைது.!
கிளிநொச்சி, தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கோரைமூட்டை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், தருமபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் 05.02.2024கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் 06.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தருமபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.