Tag: கச்சதீவு
கச்சதீவு அந்தோணியாரின் திருப்பலி..!{படங்கள்}
அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4000 வரையான பக்தர்களே வருகை தந்ததுடன் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை. மேலும் இவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், […]
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! 4454 இலங்கையர்கள் பங்கேற்ப்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு..{படங்கள்}
இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று இடம்பெற்றன. வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு நாளை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4354 பக்தர்கள் கலந்து […]
கொடியேற்றத்துடன் ஆரம்பமான கச்சதீவு அந்தோணியார் பெருவிழா..!{படங்கள்}
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.திருப்பலி நிகழ்வு நாளை(24) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இத்திருவிழாவிற்கு பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கச்சதீவு அந்தோணியர் திருவிழாவுக்கு 400 பக்தர்களுக்கு மேல் இன்று பயணம்..!{படங்கள்}
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பயணமாகி உள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் (23) 40 படகுகளில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இன்று மலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்கு தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார் திருவிழா […]
கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு!
இலங்கை – இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார். மேலும் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும், அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.
கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை..!{படங்கள்}
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும்,நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப் பதுடன் இன்று (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் தேதி மீன்பிடிக்க சென்று நான்காம் தேதி […]
கச்சதீவு பெருவிழா.!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024.02.23 ஆந் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை […]