Tag: கடற்படை
இளைஞனின் கடத்தலுக்கு உதவும் கடற்படை – வெளியான சி.சி.டிவி காட்சி!
வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்டார். கடத்தி சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறை கும்பல் தப்பி சென்று இருந்தது. வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து ,தாக்கி கடத்த முற்பட்ட வேளை , தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டினர் […]
கறுப்பு கொடி போராட்டத்திற்கு துண்டு பிரசுரம் விநியோகித்த கடற்படை
03.03.3024 இந்திய இழுவை மடி படகுகளை கண்டித்து மீனவர்களால் கறுப்புக் கொடி போராட்டம் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்டது.வடமராட்சி கிழக்கு பகுதியில் போராட்டம் மேற்கொள்வதற்காக தயாராகி கொண்டிருந்தவேளை அங்கு வருகை தந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மீனவர்களுக்கு...
சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு..!{படங்கள்}
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் 20.04.2019 அன்று கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், கடந்த 04.05.2023 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பான […]
சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால் தொடரப்பட்ட வழக்கு..!{படங்கள்}
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட...
மன்னாரில் மிரட்டிய கடற்படை மற்றும் அதிரடிப்படை..!{படங்கள்}
இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,ஆயிரம் Pregabalin காப்ஸ்யூல்கள் மருந்து வில்லைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமான பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின் போது இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் […]
கச்சதீவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் கடற்படை மும்முரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை, இந்தியாவின் கடல் எல்லைக் கோட்டிற்கு அருகில் கச்சதீவு அமைந்துள்ளது. வருடாந்த பெருவிழா வின் பிரதான ஆராதனை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப் பிரகாசம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கமைய தேவையான ஏற்பாடுகளை பக்தர்களின் நலன்கருதி உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படு த்தும் […]