Tag: கட்டிடம்
யாழில் கட்டிடம் அமைக்க நிலத்தை தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
யாழில் கட்டிடம் அமைப்பதற்கு இன்றையதினம் கிடங்கு வெட்டிய போது கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய நிலத்தை தோண்டிய போது நிலத்தின் கீழ் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சாவகச்சேரி பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த பகுதியில் மேலும் குண்டுகள் ஏதும் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக நிலத்தை தோண்டும் பணிகளும் […]
கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி-மற்றுமொருவர் கவலைக்கிடம்..!
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.