Tag: காணி
தையிட்டி காணி விவகாரம்-ஆதாரங்களை அடுக்கி துளைத்தெடுத்த சார்ல்ஸ்..!
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை […]
காணி ஒன்றில் சடலமாக கிடந்த இளம் குடும்பஸ்தர்..!
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணி விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை..!{படங்கள்}
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டதற்கு அமைவாக, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வடக்கு […]
வாகாரையிலும் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதி வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (28) திகதி இடம் பெற்றது. ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று வாகரையில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் […]
கிரானில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு..!{படங்கள்}
மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காணி உரிமங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர் காசு சித்திரவேல் தலைமையில் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் (28) திகதி இடம் பெற்றது. ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் இருபதாயிரம் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிரானில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் […]
அரசு காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு செயற்படுகின்றது..!
இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடைய காணி பறிப்பு என்ற ஒரேயொரு விடயத்தை மட்டுமே நோக்காக கொண்டு பெரும்பான்மையின சிங்கள மக்களை குடியேற்றி இனவிகிதாசாரத்தையும், இன சமத்துவத்தையும் அழிக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள் என சமூக செயற்பாட்டாளரான இரத்தினராசா மயூரன் தெரிவித்தார். குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் நீதிமன்றிற்கு வருகை தந்து வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த வழக்கானது ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் தொடர்ச்சியாக தவணையிடப்பட்டு […]
யாழ் கிளிநொச்சி காணி பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது..!
04.01.2024 அன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, அந்தப் பிரதேசங்களிலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் அவரது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான திணைக்களங்களுக்கான நடமாடும் சேவை இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த நடமாடும் சேவையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி, காணி ஆணையாளர், நீர்ப்பாசனம், வனவளவனஜீவராசிகள் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் […]
ஹெமில்டன், டேர்ப்பன்டைன் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணி எரிந்து நாசமாகியுள்ளது..!{படங்கள்}
நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு மேல் சிவனடி பாத மலைக்கு அண்டிய ஹெமில்டன், டேர்ப்பன்டைன் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணி எரிந்து நாசமாகியுள்ளது. மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்திற்கு (18) மேல் உள்ள ரிக்காடன் பகுதியில் உள்ள சிவனடி பாதமலை தொடர் வனப் பகுதியில் ஏற்பட்ட தீ கடந்த 03 நாட்களாக தொடர்ந்து பரவிய இந்த தீ, தற்போது சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் உள்ள எமிலடன் டேப்பன் டைன் வனத்தில் இந்த தீ பரவியது. இந்த பகுதியில் […]
காணி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்-சற்று முன் அமைச்சர் வெளியிட்ட தகவல்…!
எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காணி உரிமையற்ற இருபது லட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் காணிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டில் காணிகளுக்கு நிலவி வரும் செயற்கை விலை அதிகரிப்பு குறைவடையும்.. எதிர்காலத்தில் காணி விலை, கடை வாடகை, வீட்டு வாடகை என்பன குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காணி வளத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கில் அரசாங்க […]
யாழில் காணி சுவீகரிப்பு-முறியடித்த மக்கள்..!
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி இன்று(12) அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலும் 500 ஏக்கர் நிலத்தைச் சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றது. இதற்குத் தாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு மாவட்ட அரச அதிபருக்கு எழுத்தில் கடிதம் வழங்கியபோதும் அவர் […]