Tag: குடும்பஸ்தர்
வட்டுக்கோட்டை குடும்பஸ்தர் கொலை விவகாரம் – கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு!
வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் அவர்களது கொலைக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி அவரது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவேளே பொன்னாலை கடற்படை முகாமுக்கு அண்மையில் நின்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் அவரை துரத்தினர். இதன்போது குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் கடற்படை முகாமுக்குள் புகுந்தனர். இவ்வாறு அடைக்கலம் புகுந்தவர்களை […]
குளவி தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர்!
புதுக்குடியிருப்பில் நேற்று குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள துடும்பஸ்தர் ஒருவருக்கு நேற்று (13.03.2024) மாலை 30 ற்கும் மேற்பட்ட குளவிகள் தாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து காற்றில் கலைந்த குளவி வீட்டிலிருந்த செல்லையா பரமலிங்கம் 62 வயதுடைய குடும்பஸ்தர் மீது கொட்டியுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!
நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். […]
காணி ஒன்றில் சடலமாக கிடந்த இளம் குடும்பஸ்தர்..!
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிவனொலி பாத மலை சென்று திரும்புகையில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரிழப்பு..!
நல்லதண்ணி – சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ஊசி மலை பிரதேசத்தில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேளையில் நபர் ஒருவர் கடும் சுகவீனம் உற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (29) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இவ்வாறு மரணித்தவர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஏ.சிறிபால என்ற 73 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு […]
யாழை உலுக்கிய மற்றுமொரு சோகம்-ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் பலி..!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே […]
கிளிநொச்சியில் நடந்த பயங்கரம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு..!
கிளிநொச்சியில் நடந்த இனந்தெரியாத நபரின் தாக்குதலில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில்...
ராவணா எல்லப்பகுதியில் தவறிவிழுந்து குடும்பஸ்தர் பலி..!
எல்ல பிரதேசத்தில் சென்ற நபர் ஒருவர் நேற்றிரவு (22) எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 32 வயதுடைய நபர் பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்த நபர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மரம் விழுந்து குடும்பஸ்தர் பலி..!
வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இஸ்கோலவத்த எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் சற்று முன் குடும்பஸ்தர் கைது-நடந்தது என்ன..?
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர் அண்மைக்காலமாக கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் இவரை மருதங்கேணி பொலிசார் தேடிவந்தனர்.இன்றும் அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது மனைவி வேறு இடத்தில் […]