Tag: கைது
வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!
நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். […]
யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது !
கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் 11.03.2024 திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2Kg கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்கள் கைது !
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் இன்று 12.03.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விரிவாக்கமாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் தேடுதல் நடத்திச போது ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் 23 வயது அழகி கைது..!
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு அமைய வாழைச்சேனை செம்மன் ஓடை கிராமத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாழைச்சேனை முகாமின் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கே. ஜி. எல். குமாரவுக்கு கிடைத்த தகவலின் படி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குறித்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், […]
ஆழியவளை கடற்பரப்பில் இரு மீனவர்கள் கைது..!
சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று (07.03.2024) வியாழன் இருவர் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக வெற்றிலைக்கேணி கடற்படை வடமராட்சி கடற்பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது இதன் விரிவாக்கமாக கடந்த வியாழக்கிழமை காலை ஆழியவளை கடற்பகுதியில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் […]
போலி வைத்திய நிலையம் நடத்தி வந்த 66 வயது தாத்தா கைது..!
பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவராவார். இந்த வைத்தியசாலையை நடத்திச் சென்ற வைத்தியர் ஒருவர் கடந்த ஆண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த சந்தேக நபர் ,வைத்தியர் என்ற போர்வையில் இந்த வைத்தியசாலையை தொடர்ந்தும் நடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராவண லங்கா நீயூஸ் இணையதள ஆசிரியர் கைது..!
உரிமம் இன்றி இணையதளம் நடத்தி, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இணையதள ஆசிரியரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை (6) உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கல்கந்தே புரன்வத்தலகே நிஸங்கவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் ராவண லங்கா நியூஸ் என்ற இணையத்தளத்தை […]
அதிகரிக்கும் பெண்கள் மாபியா-மற்றுமொரு 40 வயது அழகி கைது..!
போதைப்பொருள் விநியோகத்தரான ‘சிகிதி’ என்ற 40 வயதான பெண் ஐஸ் போதைப்பொருளுடன் இரத்மலானையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபா என சந்தேகிக்கப்படுகிறது. இவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் குடு அஞ்சுவின் உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரத்மலான ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மஸ்கட நலுவாவின் மூத்த சகோதரி […]
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியின் சாரதியை கைது செய்ய முயற்சி..!
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்த சமயத்தில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையுடன் ஊர்தி அருகே சென்ற வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் […]
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியின் சாரதியை கைது செய்ய முயற்சி..!
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.சாந்தனின் புகழுடல்...