Tag: கையளிப்பு..!
கனகசிங்கம் பத்மாவதி நினைவாக வற்றாப்பளையில் சந்நிதியான் ஆ்சிரமத்தால் வீடு கையளிப்பு…!
காரை நகரை சேர்ந்த கனகசிங்கம் பத்மாவதி நினைவாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டு அது இன்று கையளிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு அங்கு பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு வீட்டை சம்பிரதாய பூர்வமாக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திறந்து வைத்து வீட்டு உரிமையாளரிடம் திறப்பை கையளித்தார். குறித்த பயனாளியின் ஐந்து பேர் கொண்ட குடும்பம் சிறிய பாதுகாப்பற்ற ஓலை குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்த நிலையிலேயே வற்றாப்பளை கிராம […]
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு.
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர். ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜே -241 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார். காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் பழைய வீடுகளின் கதவு, நிலை, உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொண்டு தருமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள் கேட்டுக் […]
மன்னாரில் குளிர்சாதனபெட்டிகள் கையளிப்பு..! {படங்கள்}
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15-02-204) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் […]