Tag: கொலைக்கு
இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் அராலியில் மீட்பு!
23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் நேற்றையதினம், யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது.
சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தையே..!
இலங்கையை சேர்ந்தவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருப்பதை இலங்கை அரசும் அறிந்திருந்தும் அறியாதது போல், சாந்தனின் கொலைக்கு உடந்தையாக இருந்தது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (01.03.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக்கப்பட்டு 30 […]
சாந்தனின் கொலைக்கு இலங்கை அரசும் உடந்தையே..!
இலங்கையை சேர்ந்தவர்களை இந்திய நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருப்பதை இலங்கை அரசும் அறிந்திருந்தும் அறியாதது போல், சாந்தனின் கொலைக்கு உடந்தையாக இருந்தது என...
மன்னார் சிறுமி கொடூர கொலைக்கு நீதி கோரி சற்று முன் யாழில் போராட்டம்..!
மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்(19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் அமைதிவழி போராட்டம் ஒன்று இடம்பெற்றது சிறுமியின் மரணத்திற்கு நீதியானதும் விரைவானதுமான நியாயத்தை வழங்க கோரியும், விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை […]