Tag: கொலை
மாங்குளத்தில் வீதியில் இடம் பெற்ற கொடூர கொலை..!
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இ;வாறு உயிரிழந்துள்ளார் இவரது உடம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
மட்டக்களப்பில் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு மருமகன் தப்பி ஓட்டம்..!{படங்கள்}
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளநிலையில் அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து […]
பிக்கு கொலை தொடர்பில் அழகி கைது..!
மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியமை மற்றும் உண்மையை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில – வெரகல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபரான பெண், வெரகல – தேவகல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கடந்த காலத்தில் சிறுமியை கடத்தி கப்பம் கோரி கொலை செய்தவர்கள் மன்னார் சிறுமிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் செய்வது...
மட்டக்களப்பில் ஊறணி பகுதியில் கடந்த காலத்தில் சிறுமி ஒருவரை கடத்தி கப்பம் கேட்டு கப்பம் கொடுக்காத நிலையில் சிறுமியை கொலை செய்து கிணற்றில் போட்டவர்கள் என மக்களால் குற்றம் சாட்டப்பட்ட பிள்ளையான் குழுவினர் இன்று மன்னாரில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு போராடுவது ஏழனமானதும் வேடிக்கையானது கோலித்தனமானது என சிவில் சமூக செயற்பாட்டாளரும் வடகிழக்கு முன்னேற்றகழக தலைவருமான கு.வி. லவக்குமார் தெரிவித்தார். மட்டு கிரானில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற ஊடக […]
மன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு-நீதிமன்றில் நடந்தது என்ன..?
தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று திங்கட்கிழமை (19) மதியம் உத்தரவிட்டார். தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் […]
இலங்கை கடற்படையினரால் கொலை செய்ப்பட்ட 10 மீனவர்களின் 30வது நினைவேந்தல்..!{படங்கள்}
1994.02.18 அன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கட்டைக்காட்டை சேர்ந்த 10 மீனவர்களது 30ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று(18) இடம் பெற்றது. 1994 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் பதினெட்டாம் திகதி அதிகாலை சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 மீனவர்களும் படுகொலை செய்யப்பட்டனர் இன்று 18.02.2024 மாலை 03.30மணியளவில் கட்டைக்காடு சென்மேரிஸ்மைதானத்தில் ஆரம்பமான […]
குழந்தையின் பிறந்த நாள் விழாவில் மோதல்-தடுக்கு சென்றவர் குத்துபட்டு கொலை..!
புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது அதனைத் தடுப்பதற்கு முயன்ற இரு பிள்ளைகளின் தந்தை பலத்த கத்திக்குத்து காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (18) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையின் பிறந்தநாள் விழாவின்போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் […]
9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த கயவனுக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
9 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமாரவினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பாணந்துறை – அட்டுலுகம பிரதேசத்தில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளது. திட்டமிடப்படாத கொலை மற்றும் சிறுமியை அவரது தாயின் வசம் இருந்து கடத்திச் சென்றதற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பரூக் […]
பிக்கு கொலை – கைக்குண்டுடன் ஒருவர் கைது
மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே பெண்ணுடன் இருவர் தொடர்பு!! ஒரு பெண்ணுக்காக நடந்த கொலை!
ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற...