Tag: சட்டம்
நிகழ் நிலை காப்பு சட்டம் தொடர்பாக கருத்தமர்வு..!{டங்கள்}
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பிரஜாஅபிலாச வலையமைப்பினால் கருத்தமர்வு ஒன்று நேற்று 28.02.2024 வியாழன் சிலாபம் நைனாமடம் சிந்தனை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. பிரஜா அபிலாச வலையமைப்பின் இணைப்பாளர் பிரான்சிஸ் பிரியங்க கொஸ்தா தலைமையில் ஆரம்பமான குறித்த கருத்தமர்வில் இலங்கையின் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை, பொலநறுவை,குருநாகல்,மொனறகலை,,மாத்தறை,காலி,களுத்துறை,கொழும்பு,கம்பகா(நீர்கொழும்பு) ,புத்தளம் உட்பட 16மாவட்டங்களை சேர்ந்த 40பேருக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது நிகழ் நிலை காப்பு சட்டம் தொடர்பாக சட்டத்தரணி திருமதி ரவீந்திரா விளக்க உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ஊடகவியலாளர்கள், இளையோருக்கு நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்..!{படங்கள்}
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள்’ எனும் தொனிப்பொருளில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் இச்சட்டத்தில் உள்ள நன்மை தீமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. சட்டம் தொடர்பான தெளிவு படுத்தல் களை சட்டத்தரணி புலனி காஞ்சனா ரணசிங்க வழங்கினார். இதன் போது சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் ஸனா இப்ராஹிம் மற்றும் சுதந்திர ஊடக […]
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் அமைச்சரவைக்கு.!
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் இன்றைய தினம் (12) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கூகுள், யாகூ, அமேசான் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து, சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் உடனடியாக திருத்தம் செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுத்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்டம் திருத்தப்படாவிட்டால், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று வாதிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் கொண்டுவரப்படும் புதிய சட்டம்
வேலை மாற்றம் முடிந்த பிறகு தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக அபராதம் விதிக்க ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு,. நாட்டின் தொழில்துறை தொடர்பான பல சட்டங்களில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டு, அதன் கீழ் “துண்டிக்கும் உரிமை” என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சட்டம் ஊழியர்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்க […]