Tag: சந்திக்க
வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது – டக்ளஸ்.
எல்யைற்ற வளங்களை அள்ளித் தரும் கடலானது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாத் பைண்டர் அமைப்பு மற்றும் மனிதநேய கலந்துரையாடலுக்கான மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலநிலை மாற்றம், மனிதநேய முகாமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான வட்டமேசை மாநாட்டில் உiயாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக சிறிய அளவிலான கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை […]
ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் – சபா குகதாஸ் வேண்டுகோள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் அத்துடன் சிவில் அமைப்பின் பிரநிதிகளும் இணைந்து கருத்துக்களை முன்வைப்பது மேலும் ஆரோக்கியமானதாக அமையும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை ஐ.எம்.எவ் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும். அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரையோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என […]
விஜய்யை சந்திக்க ராஜபக்ச குடும்பம் ஆர்வம்
இலங்கைக்கு வருகை தரவுள்ள தென்னிந்திய நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்யை சந்திக்க ராஜபக்ஷ குடும்பம் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள து.நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போது இலங்கையில் இருந்து முதல் ஆளாக அவருடைய அரசியல் பயணத்துக்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காதலனை சந்திக்க சென்ற 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவதினமான நேற்று முன்தினம் (06)...