Tag: சந்தித்தார்
இந்திய தூதுவரை சந்தித்தார் தமிழரசு கட்சியின் தலைவர்..!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் உள்ளக முரண்பாடுகளைக் களைந்து, அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்களும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் […]
ஜேர்மன் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குரஜாத் முதல்வரைச் சந்தித்தார் அனுரகுமார
இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலை நேற்று சந்தித்துள்ளனர். குஜராத்தின் சட்டசபை கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதற்கான அபிவிருத்தி மூலோபாய திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தின் நிர்வாக செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
அநுரகுமாரவைச் சந்தித்தார் ஜெய்சங்கர்
புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை...