Tag: சந்தித்து
யாழ் மாவட்ட வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.
இந்திய துணை தூதுவர் நல்லை ஆதின சுவாமிகளை சந்தித்து ஆசி..!
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி இன்று நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில் சந்தித்தார். இச் சந்திப்பில் சமய ரீதியான தற்போதைய நிலைமைகள், மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமய நிகழ்வுகள், இளைய சமூதாயத்தினால் மாறிவரும் சமய புறழ்வான பழக்கவழக்கங்கள், எதிர்காலத்தில் சமய சித்தார்த்தம் தொடர்பான விடையம் பற்றி சமயத் தலைவர்களினால் கலந்துரையாடப்பட்டன. இதில் சிவபூமி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் ஆறுதிருமுருகன், இந்திய தூதர […]
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.