Tag: சம்பள
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், […]
அரச நிறுவனங்களின் சம்பள அதிகரிப்பு-அமைச்சர் வைத்த செக்..!
அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் […]