Tag: சிறுமிகள்
இந்த வருட தொடக்கம் முதல் இன்று வரை 112 சிறுமிகள் கர்ப்பம்-வெளியான அதிர்ச்சி தகவல்..!
நாட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த 2022 ஆம் ஆண்டில் 1,232 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 1,497 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 168 சிறுமிகள் […]
யாழில் 91 சிறுமிகள் அம்மாவாகினர்-வெளியான அதிர்ச்சி தகவல்..!
யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டில் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 91 இளவயது மகப்பேறுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகள், பொலிஸார் மற்றும் நீதிமன்றத்திற்கு...