Home Tags ஜனாதிபதி

Tag: ஜனாதிபதி

இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்-oneindia news

இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்

0
இன்னும் ஏழு மாதங்களில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த நாட்டை ஒன்றிணைத்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் கட்சி சார்பற்ற ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]
" தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை" எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு..-oneindia news

” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு..

0
” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பாளர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யாழில். கடந்த 33 வருட காலமாக இராணுவ […]
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி-oneindia news

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி

0
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், […]
ஜனாதிபதி தனது மானத்தை காப்பாற்ற கேட்டதற்காக சுமந்திரன் கூட்டத்திற்கு சென்றிருக்கலாம் - நா.உ. கோவிந்தன் கருணாகரன்-oneindia news

ஜனாதிபதி தனது மானத்தை காப்பாற்ற கேட்டதற்காக சுமந்திரன் கூட்டத்திற்கு சென்றிருக்கலாம் – நா.உ. கோவிந்தன் கருணாகரன்

0
ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்தரனிடம் நீ யாவது வந்து எனது மானத்தை காப்பாற்று என கேட்டிருக்கலாம் ? அதனால் அவர் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு […]
சற்று முன் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!-oneindia news

சற்று முன் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!

0
எதிர்காலத்தில் ​வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சுருங்கியிருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடையும் என்றார். மேலும் கருத்து தெரிவிக்கையில், […]
தனக்கு சாதகமான சட்டங்களை இயற்றுகிறார் ஜனாதிபதி..!-oneindia news

தனக்கு சாதகமான சட்டங்களை இயற்றுகிறார் ஜனாதிபதி..!

0
சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் இன்றைய தினம்28.02.2024 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்க இவ்வாறு தெரிவித்தார். தற்பொழுது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் மீதுநம்பிக்கை இல்லா பிரேரனையை முன் வைத்துள்ளனர் நிகழ் நிலை காப்பு சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின்தெரிவித்த கருத்துக்களில் சிலவற்றை உள்ளடக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன் நிகழ்நிலைகாப்பு சட்டதினால் சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வரும் அனைவருக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது உயர் நீதிமன்றத்தின் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் […]
மலையக மக்களுக்கு ஜனாதிபதி வாக்குறுதி-நம்பலாமா..?-oneindia news

மலையக மக்களுக்கு ஜனாதிபதி வாக்குறுதி-நம்பலாமா..?

0
  நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சி பேதமின்றி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்த எதிர்பார்க்கும் முன்மொழிவுகளை அடுத்த மாதத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி […]
ஹங்கேரிய ஜனாதிபதி இராஜினாமா.!-oneindia news

ஹங்கேரிய ஜனாதிபதி இராஜினாமா.!

0
ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின் நோவக் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘நான் தவறு செய்துவிட்டேன். அதனால்தான் ஜனாதிபதியாக இதுவே எனது கடைசி உரையாகும். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாததற்கு மன்னிக்கவும். “சிறு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பில் நான் […]
அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!-oneindia news

அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!

0
7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு நேற்று (10) விஜயம் செய்தார். தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான […]
நாடு திரும்பினார் ஜனாதிபதி!-oneindia news

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

0
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (10) இரவு நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகியதுடன், ​​7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றினார். மேலும், பல நாடுகளின் அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்

RECENT POST