Tag: டக்ளஸ்
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – அமைச்சர் டக்ளஸ் –
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட […]
வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது – டக்ளஸ்.
எல்யைற்ற வளங்களை அள்ளித் தரும் கடலானது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாத் பைண்டர் அமைப்பு மற்றும் மனிதநேய கலந்துரையாடலுக்கான மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலநிலை மாற்றம், மனிதநேய முகாமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான வட்டமேசை மாநாட்டில் உiயாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக சிறிய அளவிலான கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை […]
யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக்!
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக் இன்றையதிம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்க மத்திய நிலையத்திற்கு இன்று காலை விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்கும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
டக்ளஸ் வெளியிட்ட முக்கிய தகவல்.
வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை சரியானதாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில் – பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் சரியான அரசியல் வழிநடத்தல் காரணமாக அந்த நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் […]
அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்!
போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார். கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர் அவ்வப்போது வெளியிடும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், எமது மாவட்டங்களில் காணப்படும் வளங்களை பயன்படுத்தி அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்பும் நோக்ககோடு, விஞ்ஞான ஆய்வுகள் மூலம் சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்து மேற்கொள்ளப்படும் கடலட்டை பண்ணைகளை எழுந்தமானமாக விமர்சிப்பதன் மூலம் எமது மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அமைப்பை உருவாக்கும் டக்ளஸ் – வெளியான அதிர்ச்சித் தகவல்
வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயத் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் – வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினர் முடியுமானவரை தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எமது கடல் வளங்களும் எமது கடற்றொழிலாளர்களது கடற்றொழில் உபகரணங்களும் சட்டவிரோதமாக எமது கடற்பரப்புகளுக்குள் உள் நுழையும் இந்திய மீன்படியாளர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் கடற்பரப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றுமொரு முயற்சியாக குறித்த யோசனையை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளேன். அதாவது கடல் பகுதிகளை கண்காணிப்பு செய்வதற்காக கடல் சாரணர் அமைப்பு என்ற ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி அவர்களையும் குறித்த இந்திய மீன்பிடியாளர்களின் செயற்பாடுகளை கண்காணித்து கடற்படையினரது உதவியுடன் கட்டுப்படுத்த முடியும் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. – அமைச்சர் டக்ளஸ்.!
தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் பல கலைஞர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற, விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் அமிழ்த்தி குளிர்காய விரும்பும் சுயநலத் தரப்புக்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(09.02.2024) இடம்பெற்ற தென்னிந்திய திரைப் பிரலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக கடற்றொழில் […]
மக்களின் முதன்மைத் தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணங்க சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் எமது மாவட்டத்திற்கும் கூடுதலான...
சாந்தனின் தாயாரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி
சாந்தனின் தாயாரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி வழங்கியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள்...