Tag: தமிழ்
பொங்கி எழும் தமிழ் மக்கள் – நாளை நல்லூரிலிருந்து வவுனியா நோக்கி மாபெரும் வாகனப் பேரணி!
வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளால் நாளை காலை 7.30 மணிக்கு நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. பேரணியாக வவுனியா சென்று அங்கு நடைபெறும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்! வெடுக்குநாறி தமிழர் சொத்து!
சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது-செல்வம் அடைக்கலநாதன்...
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை இலங்கை அரசாங்கம்,அதனுடன் சேர்ந்த திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காகவும் எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர். இந்த நிலையிலே,தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் மீது பொலிஸார் வன்முறையை உபயோகித்துள்ளனர். குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. என அவர் மேலும் […]
8 வயது தமிழ் சிறுமி கடத்தி-துஸ்பிரயோகத்தின் பின் கொலை-மூட்டையாக கட்டி கால்வாயில் வீசிய கொடூரன்..!
புதுச்சேரி சோலைநகர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியான ஆர்த்தி கடந்த 2ஆம் திகதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் எந்த பதிவும் கிடைக்காத காரணத்தினால் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்ததையடுத்து குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சோதனையிட்ட பொலிஸார் வாய்க்காலில் வேட்டியால் கட்டிய […]
மலையகத்தில் தரம் 5 மாணவியை துஸ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை தீர்ப்பளித்துள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இத் தண்டனையை வழங்கியுள்ளார். கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை […]
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் ..!
வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (05) வடக்கு மாகாண கல்வி அமைச்சர் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்த இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்தியான சேவைக்காலங்களைப் பூரணப்படுத்தி, முறையாக விண்ணப்பித்து, அதனை கல்வி வலயங்களும் மாகாணமும், ஆசிரிய இடமாற்ற சபைகளும் அங்கீகரித்ததன் பின்னர் இடமாற்றம் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வெளிப்படுத்த வேண்டும். என […]
வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது சுவரின் ஒரு பகுதி திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு […]
வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த...
கனடா மாப்பிளையை எதிர் பார்க்கும் தமிழ் பெண்களுக்கு ஆப்பு-கடுமையாகும் விசா நடமுறை..!
கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்க உள்ளதாக அறிவித்துள்ளன. கனடாவின் ஐஆர்சிசி அமைச்சர் மில்லர் கருத்துத் தெரிவிக்கையில், “கனடாவுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வீடு, சுகாதாரம் மற்றும் பிற வசதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு வரும் மாணவர்கள் தீய சக்திகளின் வலையில் சிக்காமல் இருக்கவும் கனடாவின் மக்கள்தொகை நிலையானதாக வளரவும் வேண்டும் என்பதே எங்கள் முயற்சி என குறிப்பிட்டுள்ளார். முதுநிலை அல்லது முனைவர் பட்டத்திற்கு படிக்கும் சர்வதேச […]
தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது..!
தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின் தள்ளப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார். வருடந்தோறும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு தவக்காலத்தில் விடுக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தவக்கால மடலில் மேலும் தெரிவிக்கையில்,,,, திருச்சபையின் திருவழிபாட்டு […]
சாந்தனின் மரணத்திற்கு தமிழ் தலமைகளே பொறுப்பேற்க வேண்டும்..!
சாந்தனின் மரணத்திற்கு இந்திய, இலங்கை அரசுகளும் தமிழ் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் ஒரே இரவில் பேச்சுவார்த்தை மூலம் விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் சாந்தனை உடன் விடுதலை செய்ய முடியாமல் போனது என மு.கோமகன் கேள்வி எளுப்பியுள்ளார். அத்தோடு இலங்கையில் […]