Tag: துப்பாக்கி
மன்னாரில் துப்பாக்கி சூடு-வீதியை மறித்த மக்கள்-பரபரப்பு தகவல்..!{படங்கள்}
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம்-நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, இன்று திங்கட்கிழமை (19) காலை 8.30 மணியளவில் நொச்சி குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் […]
துப்பாக்கி வேட்டுக்களால் அதிரும் கொழும்பு-குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..!
கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முகத்துவாரம் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக […]
துப்பாக்கி சூடு ஒருவர் பலி
நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.
பிக்குவைக் கொல்ல துப்பாக்கி கொடுத்தவர் கைது
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கி வழங்கிய நபரே கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி காலை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கட்டு துப்பாக்கி வெடித்ததில் போலீஸ் உத்தியோத்தர் ஒருவர்படுகாயம்
தர்மபுரம் போலீஸ் நிலையத்தில் கடமையாட்டும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டு துப்பாக்கி வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.இன்றைய தினம் ( 01.02.2024 ) தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு...