Tag: தும்புத்தடியால்
தும்புத்தடியால் மூன்று மாணவர்களை துவைத்தெடுத்த ஆசிரியர்..!
பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவர்களின் வகுப்பாசிரியர் இவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம்டைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் இந்த மூன்று மாணவர்களையும் தாக்கியதாக முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்
தும்புத்தடியால் மூன்று மாணவர்களை துவைத்தெடுத்த ஆசிரியர்..!
பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியதில் 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவர்களின் வகுப்பாசிரியர்...